ரஷ்யாவில் எண்ணெய்க் கிடங்குகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாடுகளும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் எல்லைக்கு அருகேயுள்ள ரஷ்ய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஸ்மோலென்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்க் கிடங்கை குறிவைத்து தாக்கியதில் பயங்கர தீவிபத்துடன் வெடித்துச்சிதறியது.
கலுகா மற்றும் பிரையன்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களிலும் இதேபோன்று எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இதுபோன்ற ஆத்திரமூட்டல்களுக்கும் அஞ்சப்போவதில்லை என்று கார்டிமோவ்ஸ்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது