ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இணையும் ரஜினியின் 171 ஆவது படத்துடைய டைட்டில், 3 நிமிட டீசருடன் வெளிவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ரஜினி – லோகேஷ் இணையும் படத்திற்கு அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். 71 வயதாகும் ரஜினிகாந்த் இன்றளவிலும் அயராது தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
இந்த படத்திற்கு ‘கூலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.. படத்தின் டீசரை பார்க்க…