மாஞ்சோலை நிஜாமியா சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு, கிண்ணியா நகர சமுர்த்தி வங்கி மற்றும் கிண்ணியா பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடாத்திய 2024ம் ஆண்டுக்கான தமிழ் சிங்கள புத்தாண்டு சமுர்த்தி விளையாட்டு போட்டி இன்று (21) பைசல் நகர் கடலூர் விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது மாஞ்சோலை நிஜாமியா சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு தலைவர் மற்றும் கிண்ணியா நகர சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஜனாப். ஏ.ஜி.எம். அர்ஷாத் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்கழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கிண்ணியா பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிண்ணியா வங்கி சங்க முகாமையாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் கிண்ணியா நகர சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், வலய உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.