இ.தொ.கா அழைப்பை ஏற்று கம்பனிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அறவழி போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி!
-இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய அறவழி போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தி இன்று மலையகத்தில் மாவட்டங்களிலும், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தை வலுப்பெற செய்த தொழிலாளர்கள் வர்த்தகர்கள்,அரச உத்தியோகஸ்தர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்ளவதோடு, எதிர்வரும் 24ஆம் திகதி கம்பனிகளுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்மானம் எட்டப்படவில்லை என்றால் இந்த போராட்டம் வலுப்பெறும் எனவுன் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.