பொகவந்தலாவ நகரில் இ.தொ.காவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் குழந்தைவேலு ரவியின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்க கோரி கம்பனிகளுக்கு எதிராக நகர் முழுவதும் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.