இம்முறை சிறுபோகத்தின் போது அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகளவான நிலப்பரப்பில் நிலக்கடலையினைப் பயிரிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்கள அநுராதபுர மாவட்டப் பணிப்பாளர் தேனுவர தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இம்முறை சிறுபோகத்தின் போது 15,000 ஏக்கரில் அதிக விளைச்சலைத் தரும் நிலக்கடலையினைப் பயிரிடுவதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கிணங்க, இம்முறை அநுராதபுர மாவட்டத்திலும் அதிகமான நிலப்பரப்பில் நிலக்கடலையினை உற்பத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலக்கடலை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் இலவசமாகத் தேவையான நிலக்கடலை விதைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டள்ளது. அவ்விவசாயிகள் இதனால் பாரிய நன்மைகளை அடைவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அநுராதபுர மாவட்டப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.