வட்டக்கச்சியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் விற்பனை நிலையம் நேற்று(19) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலைய விற்பனை செயற்பாடுகளை மதியம் 12.00 மணிக்கு வட மாகாண விவசாய பணிப்பாளர் சு. செந்தில்குமரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், பாட விதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ் விற்பனை நிலையம் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் அதாவது கிழமை நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை, சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரைவிற்பனை செயற்பாடுகள் இடம்பெறும்.
மேலதிக விபரங்களுக்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளரை 077-3028270 அல்லது 071-3028270 தொலைபேசி இலக்கமூடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.