மஸ்கெலியாவில் சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள்..!

இன நல்லிணக்கத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வகையில் முதன்முறையாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றது.

இந் நிகழ்வு மஸ்கெலியா சாமிமலை பெயாலோன் கல்லூரியில் கல்வி பயிலும் தொழிலாளர் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் கல்லூரி விளையாட்டரங்கில் நேற்று (18) காலை முதல் மாலை வரை இடம்பெற்றது.

நோட்டன் விவசாய சேவைகள் நிலையத்தின் விவசாய சேவைகள் திணைக்களத்தின் பணிப்புரையின் பேரில் சாமிமலை விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் சரத் குமாரவினால் சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் சிங்கள தேசிய விளையாட்டு மற்றும் கலாசார அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்து பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலையில் முதன்முறையாக நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் தமிழ் மாணவர்கள் பல புதிய அனுபவங்களைப் பெற முடிந்ததாக பெயலோன் கல்லூரி அதிபர் சுப்பையா தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பெரும் உதவியாக உள்ளது என இங்கு கருத்து தெரிவிக்கும் போது அதிபர் மேலும் கூறினார்.

சாமிமலை நகரில் உள்ள வர்த்தக சமூகம், தோட்ட முகாமையாளர்கள் மற்றும் அப் பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த சித்திரை புத்தாண்டு விளையாட்டு போட்டிக்கு அனுசரணை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட விவசாய சேவைகள் பிரதி ஆணையாளர் வசந்த குணவர்தன, ஹொரண பெருந்தோட்டயாக்கத்தின் முகாமையாளர்கள், தோட்ட அதிகாரிகள், நோட்டன் விவசாய சேவை நிலையத்தின் விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உதவியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தோட்ட தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.19.04.2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *