மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிகழ்ச்சித் திட்ட ஆய்வாளர் முஹமட் முசைன் உள்ளிட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் (16) இடம் பெற்றது.
மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் எதிர் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது குளங்கள் புனரமைப்பு , சத்துணவு வழங்கல் , இடர் காப்பு வேலைத்திட்டம், நவீன மயப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் செயற்திட்டங்கள் மேற்கொள்ளும்போது எதிர் நோக்கும் சவால்கள் இங்கு அதிபருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந் நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.பார்த்திபன், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ஆர். ஜதிஸ்குமார், வி.நவநிதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.