ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(SRH) அணி மீண்டும் படைத்துள்ளது.
அதன் படி, பெங்ளூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி (SRH), 20 ஓவர்கள் முடிவில் 287 ஓட்டங்களை குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
அதேவேளை, கடந்த மாதம் 27 ஆம் திகதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி (SRH), 20 ஓவர்கள் முடிவில் 277 ஒட்டங்களை குவித்து சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில், குறித்த சாதனையை அதே அணியே மீண்டும் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.