சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய தேவையான எரிபொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் பிரதான முனையங்கள் மற்றும் பிராந்திய களஞ்சியசாலைகளில் போதுமான இருப்புக்களை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பண்டிகை காலத்தில் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச்செயலாளர் கபில நாவுதுன்னாட தெரிவித்துள்ளார்.