“Mahagastota Hill climbs”கார்பந்தய போட்டியில் Mini 7 பிரிவில், கார் ஓட்டப்பந்தய வீரரான K.பரமேஸ்வரன் முதலிடத்தை பிடித்தார்.
Mahagastota Hill climbs இல் நடைபெறும் 90 ஆவது கார்பந்தய போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பல பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த கார்பந்தயப் போட்டிகளில், Mini 7 பிரிவில் முதலிடத்தை பெற்ற K.பரமேஸ்வரன், 78வது முறையாகவும் முதல் இடத்தை பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
கடந்த 25 வருடங்களாக இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்ற கார்பந்தய போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் K.பரமேஸ்வரன் நூற்றுக்கணக்கான விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கார்பந்தய போட்டிகள், ஏப்ரல் 7 ஞாயிற்றுக்கிழமை அன்று Mahagastota இல் இடம்பெற்றது.