தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளை மேம்படுத்தும் முகமாக” சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை – 2024″ , கரைச்சி சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில்(08) நடைபெற்றது.
கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் அவர்களின் தலைமையில், கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமுர்த்தி சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக கரைச்சி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி பிரிவினரால் குறித்த சமுர்த்தி அபிமானி புத்தாண்டு விற்பனைச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உணவு பண்டங்கள், பாதணிகள், பூச்செடிகள், ஆடைகள், கைவினை பொருட்கள், மரக்கறி வகைகள், புற்பாய்கள், மீன் தொட்டிகள் என பல பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஷ்ட முகாமையாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தகர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஊடகப் பிரிவு,
மாவட்ட செயலகம்,
கிளிநொச்சி