-நிதி ஒதுக்கீடு செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்-
குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று வரும் விகாரை புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்வதற்கு 1.5 மில்லியன் நிதியும், தொல்பொருள் அருங்காட்சியகத்தை ஆரம்பிப்பதற்கு 3.5 மில்லியன் நிதியும் ஒதுக்கீடு செய்தார்.
உள்ளூராட்சி சபைகளால் பராமரிக்கப்படாத விகாரையை சுற்றியுள்ள கடற்கரையை ஆய்வு செய்து, 24 மணி நேரத்திற்குள் கடற்கரையை சுத்தம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்தார்.