இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் தென்னாபிரிக்க மகளிர் அணிக்கும் இடையில் நடைபெற்ற T20 தொடரில் இலங்கை மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை மகளிர் அணி நேற்று (03) 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்க மகளிர் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்ததுடன் அவர்கள் தமது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றனர். சுகந்திகா குமாரி 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடக்க முடிந்தது, இதில் அணித் தலைவி சமரி அத்தபத்து 73 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன்படி, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.