பம்பலபட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நான்காம் தேதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு அதிபர் திருமதி யோகராணி சிவபாலன் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
இசைப்புலவர் ந.சண்முகரத்தினம் நினைவாக, வருடம் தோறும். திறமை சித்தி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றாவது வருடமாக நடைபெறும் இந்த விழாவிற்கு பிரதம அதிதியாக. விழித்தெழு பெண்ணே சர்வதேச பெண்கள் அமைப்பின் (கனடா) ஸ்தாபகரும் தலைவியுமான திருமதி சசிகலா நரேந்திரன் கலந்து கொண்டார்.
பிரதம விருந்தினராக இசைப் புலவரின் பேரன் திரு. ஸ்ரீ பிருந்தன் கலந்து கொண்டார். இதன் போது திறமை சித்தி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் பதக்கங்களும் அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன. மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
இசைப்புலவர் சண்முகரத்னம் நினைவாக வருடாந்தம் நடைபெறும் இந்த நிகழ்விற்கு, பூரண அனுசரணையை அவரது மற்றுமொரு பேரனான ஜெர்மனியில் வசிக்கும் திரு அனந்தன் சிவராஜா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பழைய மாணவியர் சங்கத்தின் உப தலைவி கௌரி ஸ்ரீ பிருந்தன் செயலாளர் சரண்யா சுரேஷ் உள்ளிட்ட. சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த விழா இடம் பெற்றது.