T20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். T20 உலகக்கிண்ண தொடர் ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது.
முழு உடற்தகுதி பெறுவதில் முழுமையாக கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வருவதாகவும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருவதாகவும் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறை வீரராக தனது சிறப்பான பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதால், IPL மற்றும் T20 உலகக்கிண்ண தொடரை தியாகம் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
சிறப்பான சகலதுறை வீரராக எதிர்காலத்தில் விளையாட இந்த தீர்மானம் உதவும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
முழங்கால் காயம் காரணமாக நீண்ட நாட்களாக பந்துவீசாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், கடைசியாக இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 ஓவர்கள் மட்டும் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.