லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,652 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 23 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 772 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.