மட்டக்களப்பில் ஈஸ்ரர் ஞாயிறு தினத்தையிட்டு சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விசேட ஆராதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்றது.
கடந்த 2019 ஏப்பிரல் 21 ம் திகதி ஈஸ்ரர் ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உல்லாச ஹோட்டல்களில் ஜ.எஸ்.ஜ.எஸ தீவிரவதக அமைப்பினரான் ஸாரான்குழுவால் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 300 பேருக்கு உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்களாகிய நிலையில் இந்த தாக்குல் தொடர்பான சூத்திரதாரிகள் கைது செய்யப்படவில்லை என ரஞ்சித் மெல்கம் ஆண்டகை உட்பட அரசியல்வாதிகள் குற்றம் சுமத்திவருகின்றதுடன் முன்னாள் ஜனாதிபதி தாக்குதல் தொடர்பாகன சூத்திரதாரி தெரியும் என தெரிவித்து பல சார்ச்சைகள் இடம் பெற்றுவருகின்றது.
இவ்வாறான நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) சீயோன் தேவாலயம் மற்றும் மாவட்டத்திலுள் தேவாலங்களில் பொலிசார் விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று ஈஸ்ரர் விசேட ஆராதனை இடம்பெற்றது.
(கனகராசா சரவணன்)