கிழக்கு மாகாணத்தில் சத்துமா உற்பத்தி நிலையம் திறப்பு …

கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயத்தியமலை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய திறப்பு விழா (27) இடம்பெற்றது.

நியூசிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயத்தியமலையில் 80 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய திறப்பு விழா நிகழ்வு அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேச பெண்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இச்சத்துமா உற்பத்தி நிலையம் மற்றும் அதனோடு இணைந்த வெதுப்பக தொகுதியும் திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்யானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் கலந்து கொண்டு இந்த புதிய உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்து, அங்கு மேற்கொள்ளப்படும் செயற்பாடு களையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்விற்கு சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஆதீதி சொஷ் மற்றும் பிரதேச செயலக உயர் அதிகாரிகள், ஆயத்தியமலை பொலீஸ் நிலைய உயர் அதிகாரிகள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிந்தங்கிய பிரதேச மக்களின் ஆரோக்கியத்தினைக் கட்டியெழுப்பும் முகமாக குறைந்த விலையில் தமது பிரதேசத்திலேயே தேவையான அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதற்காக இப்புதிய உற்பத்தி நிலையமும் வெதுப்பக தொகுதியும் இங்கு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *