டேனியல் பாலாஜி அம்மாவும், நடிகர் முரளி அம்மாவும் உடன்பிறந்த சகோதரிகள்!
நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் முரளி, லைலா நடித்த ‘காமராசு’ படத்தில் உதவி இயக்குனராக முதன்முதலில் பணிபுரிந்து, திரையுலகில் நுழைந்தார்!
டேனியல் பாலாஜி சென்னை ஆவடியில் அங்காள பரமேஸ்வரி என்ற அம்மன் ஆலயம் ஒன்றையும் கட்டியுள்ளார்..
சித்தி தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் பாலாஜி
அவர் உடல் வைக்கப்பட்டிருந்த கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் புரோமேட் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் திரைத்துறை பிரபலங்கள் குறிப்பாக தயாரிப்பாளர் கௌதம் வாசுமேனன், அமீர் வெற்றிமாறன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் போன்ற திரை பிரபலங்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.
மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மல் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இன்று மாலை அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யபட உள்ளது.