மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவுக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரி போன்றவற்றில் உணவை கையாளும் போது நுகர்வோருக்கு ஏற்படும் திருப்தி மற்றும் அதிருப்தியை தெரியப்படுத்தும் புதிய வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் உணவகங்களின் உணவின் தரம், உணவு கையாலுகையில் திருப்தியா, அதிருப்தியா போன்ற விடையங்களை 0705711151 என்ற வட்ஸ் ஸப் இலக்கத்தின் ஊடாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் குறுஞ் செய்தி ஊடாக அனுப்பும் போது அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன் போடு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற புதிய வட்ஸ் ஸப் இலக்கம் அறிமுகப் படுத்தும் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், பேக்கரி, ரெஸ்டுடன் ஆகியவற்றின் உரிமையாளர்கள், நடத்துனர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்தியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வட்ஸ் ஸப் இலக்கம் அறிமுகத்துடன் உணவகங்களில் விளம்பரப் படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.