சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பெண் உழவு இயந்திர சாரதிகளின் காட்சிப்படுத்தல் நிகழ்வு..!!

கிளிநொச்சி மாவட்டச்செயலகமும் மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைத்து நடாத்திய சர்வதேச மகளீர் தின நிகழ்வு நேற்றையதினம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

பெண்களுக்காக முதலீடு செய்து முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந் நிகழ்வில் பெண் உழவு இயந்திர சாரதிகள் உழவு இயந்திரத்தை இயக்கி காட்சிப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் ஒய்வுநிலை அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)திருமதி நளாஜினி இன்பராஜ் அவர்கள் திருமதி கோசலை மதன்(தலைவர் சட்டத்துறை யாழ் பல்கலைக்கழகம் அவர்கள் திருமதி.ஹ.சத்தியஜீவிதா உதவி மாவட்டச் செயலாளர் அவர்கள் மாவட்டச்செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.மா. அருந்தவராணி அவர்கள் மற்றும் மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள்,சாரதி பயிற்றுவிப்பாளர்,சாரதி பயிற்சி நிலையத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு பெண் உழவு இயந்திர சாரதிகளின் முயற்சியினை பாராட்டி வாழ்த்துக்களை வழங்கி உற்சாகப்படுத்தியிருந்தனர்.

+33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *