லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171 வது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது..
ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியானது, மேலும், இந்த படத்திற்காக 4 முதல் 5 மாதங்களாக முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், ஜுனில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் கூறியிருந்தார். தற்போது ரஜினியின் 171 வது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை லோகேஷ் கனகராஜ் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் மாஸ் லுக்கில் இருக்கும் இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், படத்தின் டீசர் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளம் முழுவதும் ரஜினி 171 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது , மற்றும் #Rajini171 என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.