3ம் நாளாக தொடரும் கல்முனை பிரதேச நிர்வாக அத்துமீறிய தலையீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.
பல்வேறு நிர்வாக அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து பொதுமக்களினால் இன்றும் மூன்றாவது நாளாக கொட்டும் மழையிலும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டு வருகின்றது.
அதேபோன்று தேசிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டங்கள் செய்த்திட்டங்களின் போது கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவு தனியான பிரதேச செயலக பிரிவாகவே கருதப்படுகின்றது.
செயற்திட்டங்களின் அனுமதி நிதி ஒதுக்கீடுகள் என்பனவும் மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலக பிரிவுகள் போன்றே பிரத்தியேகமாகவே இடம்பெற்று வருகின்றது இந்நிலையில் கல்முனை வடக்கு பிரிவானது பிரதேச செயலகப் பிரிவு ஒன்றாக தரம் உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் இந்த விடயங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இது பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட்டு இருக்காவிட்டால் மேற்படி விடியுங்கள் எதுவும் சாத்தியமற்றதாகிவிடும் எனவும் கல்முனை வடக்கு பிரிவானது பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்படவில்லை என கருதினால் மேற்படி அணைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்திய அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் குற்றம் இழைத்தவர்களாக கருதப்பட வேண்டும் எனவும் பல வாதங்களை முன்வைத்து இப்போ போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .