யாழ்ப்பாணம் கோண்டாவில், பரஞ்சோதி வித்தியாலயத்தில், 23 வருடங்களின் பின்னர் முதன்முறையாக மாணவி ஒருவர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இப்பாடசாலையில், 2000ஆம் ஆண்டிற்கு பின்னர், மாணவியொருவர் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாடசாலைக்கு தனது ஒழுங்கான வரவு, அதிபர், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் விடா முயற்சியே தனது வெற்றிக்கு காரணமென குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.