ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான முழு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு ஐபிஎல் கிரிக்கெட் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி அட்டவணை 2 கட்டங்களாக வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வெளியிடப்பட்ட அட்டவணையில் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கும் போட்டிகள் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
மே மாதம் 26 ஆம் தேதி இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.