கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் இன்று மாலை பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
வெள்ளவத்தை காலி வீதியில் அமைந்துள்ள Nolimit ஆடை விற்பனை நிலையத்திலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கடைக்குள் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் உயிர் சேதம் எதுவும் அறியக்கிடைத்தது.
தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு படையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.