மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் எழுச்சி மாநாடு பசறை நூலக கேட்போர் கூட மண்டபத்தில் மலையக மக்கள் முன்னணியின் உப தலைவரும் , மலையக மக்கள் முன்னணியின் கவுன்ஸில் உறுப்பினரும் , முன்னாள் பசறை பிரதேச சபை உறுப்பினருமான கண்மணி சிவநேசன் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அத்துடன் விஷேட அதிதிகளாக பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை விரிவுரையாளர் கலாநிதி ரமேஷ் கலந்து கொண்டிருந்ததுடன் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் S. விஜயசந்திரன், மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் R.ராஜாராம் , மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொதுச் செயலாளர் L.விஸ்வநாதன், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் தாழமுத்து சுதாகரன் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பசறை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து அதிதிகள் அனைவரும் பசறை நூலக கேட்போர் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டு இளைஞர்கள் எழுச்சி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் இளைஞர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.