டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை சேர்த்தது.
17வது ஓவரிலேயே 8 விக்கெட்டுகளை இழந்ததால், டெல்லி அணி தரப்பில் இம்பேக்ட் வீரராக அபிஷேக் போரல் களமிறக்கப்பட்டார். அவர் கடைசி 10 பந்துகளில் 32 ரன்களை விளாசி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது.
சிறப்பாக விளையாடிய சாம் கரன் 46 பந்துகளில் 63 ரன்கள் விளாசி அசத்தினார். அதேபோல் கடைசி வரை களத்தில் நின்று அசத்திய லிவிங்ஸ்டன் 21 பந்துகளில் 38 ரன்களை சேர்த்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இதனால் டெல்லி அணி தனது முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது.