நெதர்லாந்து அரசாங்கத்தின் DRIVE மென் கடன் நிதியளிப்புத் திட்டத்தின் கீழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் தொகுதி 22/03/2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
பல மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மேற்படி கட்டட திறப்பு விழா வைபவத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கலந்து சிறப்பித்திருந்தார்.
புதிய சிகிச்சைப் பிரிவானது அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிட்சைப் பிரிவு, சத்திர சிகிச்சைக் கூடங்கள், குருதி சுத்திகரிப்புப் பிரிவு, கதிரியக்க பிரிவு, சிறுவர்களுக்கான சிகிச்சைப்பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.