மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் இன்று அதிகாலை 3.30. உடைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்ய உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார தெரிவித்தார்.
பொறுப்பதிகாரி புஷ்பகுமார நேரடியாக வந்து பார்வை இட்ட பின்னர் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.
விசேட பொலிஸ் பிரிவு ஒன்று சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகி உள்ளதை பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் மதுபான விற்பனை நிலையத்தில் கொள்ளையடித்து சென்ற விபரம் திரட்டி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் மஸ்கெலியா நகரில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் 2 விற்பனை நிலையங்கள் உடைக்க பட்டமை குறிப்பிடத்தக்கது.
தனி ஒருவன் முகத்தை மூடிக் கொண்டு கடைகள் உடைப்பில் ஈடுபட்டு வருவது கேமராக்களில் பதிவாகி உள்ளது.
திருடனை அடையாளம் காணவும் விஷேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு உள்ளனர்.