மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய இணைப்பாளர் சுப்பிரமணியம் ரமேஸ்
நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் கால நிலை மாற்றம் காரணமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையே அல்லது இடியடன் கூடிய மழை பெய்யக்கூடும் வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பல தடைவ மழைபெய்யக் கூடும் ஏனைய பகுதிகளில் மழையே அல்லது இடியுடன் கூடய மழை பெய்யக்கூடும் என வெள்ளிக்கிழமை (22) மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய இணைப்பாளர் சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.
சப்புரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 வீதத்திற்கும் மேலான அதிகமான மழை பெய்யக் கூடும் மத்திய சப்புரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பனி மூட்டம் காணப்படும்
அதேவேளை இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கின்றனா.;
இதேவேளை நாட்டில் சூழவுள்ள கடல் பரப்புக்களை பொறுத்தளவில் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு அம்பாந்தோட்டை ஊடாக காலிவரையான கடல் பரப்புக்களில் மழையே அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பரப்புக்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையே அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டை சூழவுள்ள கடல்பரப்புக்களில் காற்றானது கிழக்கு அல்லது மாறுபட்ட திசையில் வீசுவதுடன் மணிக்கு 20 தொடக்கம் 30 வரை காணப்படும் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரயிலான கடற்பரப்புக்களுக்கு அப்பாற்பட்ட கடல் பரப்புக்களில் காற்றின் வேகமானது 40 தொடக்கம் 45 வரை அவ்வப்போது காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்
புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரயிலான கடல்பரப்பில் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என அவர் தெரிவித்தார்.
அதேவேளை திடீர் கால நிலை மாற்றம் காரணமாக கிழக்கில் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் நேற்று வியாழக்கிழமையில் இருந்து அவ்வப் போது மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(கனகராசா சரவணன் )