கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் வீதியால் சென்ற பெண் உருவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் ஒருவரை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு எல்லை பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (22) பொதுமக்கள் மடக்கி பிடிக்க முற்பட்டபோது திருடன் தங்க சங்கிலியுடன் ஆற்றில் குதித்து மாயமாகியதையடுத்து கடற்படை ட்ரோன் கமரா உதவியுடன் தேடும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
அண்மை காலமாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சில பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அண்மையில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை திருடன் ஒருவன் அறுத்துச் சென்றுள்ளான்
இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சம்பவதினமான இன்று பொலிசார் நற்பிட்டிமுனை பாண்டிருப்பு எல்லை பகுதிக்கு சென்றுள்ளனர் இதன் போது அந்தபகுதியில் இருந்த குறித்த 40 வயதுடைய திருடனை பொதுமக்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட நிலையில் திருடன் அங்கிருந்த தப்பி ஓடி ஆற்றில் குதித்து மாயமாகியுள்ளான்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கடற்படையினரது உதவியை நாடியதையடுத்து கடற்படையினர் இயற்திர படகு மற்றும் ட்ரோன் கமரா உதவியுடன் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேவதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
(கனகராசா சரவணன்)