கலாநிதி ஜனகன் எண்ணக் கருவில் உருவான நல்லிணக்கத்தை மேம்படுத்துவோம் என்னும் இப்தார் நிகழ்வு (21/03)நேற்று வடகொழும்பு மட்டக்குளி ஹம்சா கல்லூரி மண்டபத்தில் ஜனனம் அறக்கட்டளையின் ஏற்பாட்டிலும் ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் முழு அனுசரணையிலும் மிக விமர்சையாக இடம் பெற்றது.
இன் இப்தார் நிகழ்வில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர்,சட்ட முதுமானி ஓ.எல் அமீர் அஜ்வாத் அவர்களும் ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான ஜனகன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் வியாபார மேம்பாட்டு முகாமையாளரும் ஜனனம் அறக்கட்டளையின் முக்கியஸ்தருமான றிஸ்கான் முகம்மட், வடகொழும்பு அபிவிருத்தி சங்கத்தின் முக்கியஸ்தர்களான முகம்மட் றிஸ்வி, முகம்மட் ஹசன்,மொஹமட் மீனாஸ் ஆகியோரும்,கல்விமான்களும்,பாடசாலை அதிபர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்கள்.அத்துடன் சவுதி அரேபியாவுக்கான
இலங்கை தூதுவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சட்ட முதுமாணி,சிரேஷ்ட இராஜதந்தியுமானஓ.எல் அமீர் அஜ்வாத் அவர்களையும்,வசந்தம் தொலைக்காட்சியின் பிரதான முகாமையாளராக அண்மையில் நியமிக்கப்பட்டஎம்.எஸ்.எம்.இர்பான் ஆகியோரையும் ஜனகன் பொன்னாடை போர்த்தி,பாராட்டி.கௌரவித்தார்.