முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நிலக்கடலை உற்பத்தி நிறுவனமான ”முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின்” மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் (20) பி.ப 2.30 மணியளவில் ”முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின்” முகாமையாளர் திரு.சோ.சிறீதரன், தலைமையில் அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தில் அதிக இலாப்பத்தினைப் பெற்றுக்கொண்ட விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார்.
ஒட்டுசுட்டான், முத்தயன்கட்டு ,முத்துவிநாயகபுரம், தட்டயமலை, கணேசபுரம், கற்சிலைமடு, சின்னசாளம்பன், பெரியசாளம்பன் முதலிய கிராமங்களில் நவீன விவசாய விரிவாக்கல் திட்டத்தின் ஊடாக பயிர்ச்செய்கையினை மேற்கொண்டு அதிக இலாபம் ஈட்டியவர்களே கௌரவிக்கப்பட்டனர். இதில் நிலக்கடலை, ஜம்போகடலை, மிளகாய் செய்கை முதலான பயிர்களை செய்து இப்பகுதி விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டியுள்ளனர்.
முல்லை அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தினர் தாம் அடைந்ததுகொண்ட இலாபத்தல் முத்தயன்கட்டு, ஒட்டுசுட்டான், கற்சிலைமடு பாடசாலைகளில் புலமைப்பரிசில், கா.பொ.த.சா தரம், உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களையும் விசேடமாக ஆங்கில பாடத்தில் சித்தியடைந்த மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் பரிசில்கள் மற்றும் சான்றிதழிகள் வழங்கி கௌரவித்தனர்.
இந்த நிகழ்வில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி ச. ஜாமினி, வடக்கு மாகாண விவசாய நவீன மயமாக்கல் விரிவாக்கல் திட்டத்தின் செயற்றிட்ட பிரதிப்பணிப்பாளர் திரு.வி.விஜிதன், கிராம அலுவலகர்கள், முத்தயன்கட்டு, ஒட்டுசுட்டான், கற்சிலைமடு பாடசாலைகளின் அதிபர்கள், மாணவ மாணவிகள், விவசாயிகள், மக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.