மட்டக்களப்பு முகத்தூர் முழக்கம் விளையாடட்டுப் போட்டி!!

மட்டக்களப்பில் “முகத்தூர் முழக்கம் ” மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது லைட் ஹவுஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் லைட் ஹவுஸ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் லைட் ஹவுஸ் மைதானத்தில் (17) திகதி இடம் பெற்றது.

லைட் ஹவுஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் வி.கபிலன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

முகத்தூர் முழக்கம் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரில் 36 உதைப்பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டு நட்பு ரீதியான உதைப் பந்தாட்ட போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், இளைஞர்கள் வெற்றி தொல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதுடன் ஒழுக்க விதி முறைகளை கடைப்பிடிப்பதற்கு சிறந்த களமாக போட்டிகள் காணப்படுவதாகவும் மற்றும் இப் போட்டியில் விளையாடும் வீரர்கள் தேசிய சர்வதேச மட்டத்தில் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இறுதி போட்டியாக லைட் ஹவுஸ் விளையாட்டு கழகமும் காஞ்சிரங்குடா ஜெகன் அணியினருக்கும் இடையில் விறுவிறுப்பான போட்டி இடம் பெற்றது.

இரு அணியினரும் கோல் எதுவும் பெறாத நிலையில் பணால்ட்டி முறையில் லைட் ஹவுஸ் விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது.

இரண்டாம் இடத்தினை காஞ்சிரன் குடா அணியினரும் மூன்றாம் இடத்தினை இக்னேசியஸ் அணியினரும் நான்காம் இடத்தினை சன்பிளவர் அணியினரும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந் நிகழ்வில் சிரேஸ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் விசேட அதிதியாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *