அனர்த்த ஆபத்து தணிப்பு தொடர்பிலான செயலமர்வு கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (19) பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ், திருமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள், தெரிவு செய்யப்பட்ட திணைக்களங்களில் பணிபுரிகின்ற அனர்த்த தணிப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.