கைத்தொழில் அமைச்சின் மேற்பார்வையில் பதுளை மாவட்ட செயலகத்தின் “அருணோதய” என்ற தொனிப்பொருளின் கீழ் பதுளை மாவட்ட விதாதா பிரிவின் ஊடாக நடைபெற்ற மூன்று மாத கால கணனிப் பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் பிரதான நிகழ்வு அண்மையில் பதுளை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது பதுளை, சொரநாத் தொட, பிரிவுகளில் சமயப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் தொழில் தேடும் இளைஞர் யுவதிகள் என 80 பேர் இப்பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்ததுடன், இதற்கான வளவாண்மைக்கான பங்களிப்பை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரி நிலூபா ஷாமலி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பதுளை மாவட்ட மேலதிக செயலாளர் (நிருவாகம்) நிமேஷா ப்ரியங்க வணசிங்க, நிருவாக உத்தியோகத்தர் துஷாரி நிகலஸ், பதுளை மாவட்ட விதாதா அதிகாரி எஸ். எம். டீ. கே. சமரகோன், மாவட்ட பௌத்த அலுவல்கள் சேவை இணைப்பாளர் பெரேரா மற்றும் அரச அதிகாரிகள், மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.