விவசாயிகள் தாம் பெற்றுக்கொண்ட அறுவடையின் முதற் பகுதியை புத்த பெருமானுக்கு காணிக்கையாக வழங்கும் பாரம்பரியமாக புத்தரிசி விழா வருடாந்தம் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கமநல சேவை நிலையத்தில் 2024ம் ஆண்டுக்கான புத்தரிசி விழா நேற்று(18) காலை 10.00மணிக்கு நடைபெற்றுள்ளது.
விவசாயத்துறை அமைச்சும், கமநல சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த புத்தரசி வழங்கும் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
மேலும், கமநல சேவை நிலையத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.