கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தினம் இன்று(19) அனுஷ்டிக்கப்பட்டது.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ”பெண்களும் பொருளாதாரமும்” எனும் தொனிப்பொருளில் மு.ப 10.00 மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் தலைவி சால்ஸ் விஜயரட்ணம் தவச்சிறி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினராக சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டவாளர் சரண்ஜா ராசுதன் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது விருந்தினர்கள் வரவேற்கப் பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றபட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து அனுபவப் பகிர்வுகளும், விருத்தினர் உரைகள், “எங்கே போகின்றோம்” நாடக ஆற்றுகை, ‘பெண்களும் பொருளாதாரமும்” எனும் கருப்பொருளில் பட்டிமன்றம், கௌரவிப்பு நிகழ்வுகள் முதலான பல்வேறு கலைநிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், பெண்கள் சார்ந்து செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பிரதேச செயலகங்களின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாதர் சங்க அங்கத்தவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.