யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், இந்திய துணைத்தூதரகம் மற்றும் இலங்கை ஏதிலிகள் புனர்வாழ்வு நிறுவனம் இணைந்து நடாத்தும்
” சர்வதேச மகளீர் தின விழா” இன்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பெண் முயற்சியாளர்களின் பொருட்கண்காட்சியினை திறந்துவைத்தார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திரு சி.சிறிசற்குணராஜா. இதன்போது இந்திய துணைத்தூதுவர் திரு.சாய்முரளி அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனைப் பெண்கள் மற்றும் ஊக்கமளிக்கும் ஆடவர்களுக்கான விருதுகள், மூத்த பெண்மணிகளைக் கௌரவித்தல் , பெண் நிர்வாக ஆளுமைகளுக்கு மதிப்பளித்தல் முதலான விடயங்கள் நிகழ்வில் இடம்பெற்றது.
முள்ளியவளை இயலிசை நாடகக் கலாமன்றம் வழங்கிய ”கண்டறியாப்பொருள்” சமூக நாடக ஆற்றுகை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், முல்லைத்தீவு நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் மற்றும் இலங்கை ஏதிலிகள் புனர்வாழ்வு நிறுவனம் திரு.த.சஜிகரன், வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி செ.வனஜா, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.சி.ஜெயகாந், கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.