அன்னை பூபதியின் போராட்டத்தை மதிக்காத தேசம் தான் இந்திய தேசம்..!!

தமிழ் மக்களின் உரிமைக்காக அறவழியில் போராடிய அன்னை பூபதியின் போராட்டத்தை மதிக்காத தேசம் தான் இந்திய தேசம்–
-வடக்கு கிழக்கு முன்னேற்ற சங்க தலைவரும் சமூக செயற்பாட்டளருமான கு.வி. லவக்குமார்–

(கனகராசா சரவணன் )

இந்தியாவை ஆங்கிலேயரிடம் இருந்து மகாத்மா காந்தி மீட்டு விடுதலை பெற்றுக் கொடுத்தார் ஆனால் தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக தமிழ்மக்களின் புனிதர்களாகிய தியாகதீபம் திலீபன், அன்னை பூபதியம்மா  ஆகியோரின் அறவழி போராட்டத்தை மதிக்காத தேசம் தான் இந்திய தேசம் என வடக்கு கிழக்கு முன்னேற்ற சங்க தலைவரும் சமூக செயற்பாட்டளருமான கு.வி. லவக்குமார் தெரிவித்தார்.

அன்னை பூபதியின் மாதத்தையிட்டு மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அன்னை பூபதியின் சாமாதியில் இன்று செவ்வாய்க்கிழமை (19)  வடக்கு கிழக்கு முன்னேற்ற சங்கதலைவர் வி.கு..லவக்குமார் சென்று அவரின் சமாதியிலுள்ள திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மௌன இஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அன்னை பூபதியம்மாவின் அறவழி போராட்டத்தை ஆரம்பித்த மாச் 19 ம் திகதியான முதலாவது நாளான இன்று கிழக்கில் மட்டக்களப்பில தியாக தீபமான அன்னை இன்றும் எம்முடன் ஒருவராக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இலங்கையில் இந்திய இராணும் தமிழர்களுக்கு செய்த செய்த அடக்குமறைக்கு எதிராக அவர்களை வெளியேறுமாறு பல கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை ரீதியாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிம்மு ஏப்பிரல் 19 ம் திகதி உயிர் நீத்தார். அதேபோல தியாக தீபம் திலீனபன் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார்.

இந்தியாவை ஆங்கிலேயரிடத்தில் இருந்து மகாத்மாகாந்தி அகிம்சை வழியில் போராடி உண்ணாவிரதம் இருந்து இந்திய தேசத்துக்கு ஒரு விடுதலையை பெற்றுக் கொடுத்தாக அவர்கள் பெரிதாக சொல்லுகின்றனர் ஆனால் தமிழ்மக்கள் தமது உரிமைக்காக  வடகிழக்கில்  அறவழியில் உண்ணாவிரம் மேற்கொண்ட  எமது தீயாக தீபங்களின் உணர்வுகளை மதிக்காத ஒரு நாடு தான் இந்தியாவாக இருக்கின்றது

இன்றும் வடகிழக்கில் தமிழர் தாயகத்தில் உள்ள அதிகமான நிலங்கள் அபகிரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது அதன் ஒர் அங்கமாக வெடுக்குநாறி சிவன் கோயிலும் அபகரிக்கப்படுகின்றது எம்மை பெறுத்தளவில் இந்த ஆலையம் தமிழர்களுடைய முக்கியமான கலாச்சாரம், மரபுரிமைகளைசார்ந்த இந்த இடத்தை சிவராத்திரி தினத்தில் சென்று தரிசிக்க முடியாதளவிற்கு சிங்களம் தலைவிரித்து ஆடுகின்றது

இந்த கொடூரமான செயல்கள் தாயகத்தில் இடம்பெற்றுவருகின்றதுடன் தமிழர்களின் உணர்வுகள் மதிக்கப்படாத  செயல்களை செய்து கொண்டிருக்கின்றனர். இன்று சாதாரணமாக ஆலையத்தில் பூஜை செய்யவிடாது தடுத்து நிறுத்தும் சிங்கள தேசம் தமிழர்களுக்கு எப்படி சுய நிர்ணய உரிமையை தரப் போகின்றார்கள் என்ற கேள்வி தமிழ் மக்களுக்குள் இருக்கின்றது

எனவே உணர்வுளை மதிக்க தெரியாதவர்கள் இருக்கும் நாடு இலங்கை அதேபோல அன்று இந்தியாயும் தமிழர்களின் உரிமைகளை தட்டிபறிக்கு முற்பட்டபோது எங்களுடைய தியாக தீபமாகிய அன்னை பூபதியம்மா , தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்தனர் இதனை இந்தியா தேசம் மதிக்க தவறியது.

தமிழ் மக்களின் உரிமைக்காக நாங்கள் ஒவ்வொருவரும் அறவழியில் தொடர்ந்து போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம் வெடுக்குநாறிமலை அசைக்கமுடியாத சொத்து எனவே நாங்கள் எமது தாயக மண்னை அறவழியில் மீட்பதற்காக ஒன்றுதிரண்டுவருமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *