சர்வதேச மகளிர் தினத்தையொட்டி “அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் (14) திகதி காந்தி பூங்கா வளாகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நா.தனஞ்சயன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
இதன்போது சிறந்த மகளிர் சங்கம், சிறந்த மாதர் அபிவிருத்தி சங்கங்கள் என்பன கெளரவிக்கப்பட்டதுடன் சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளராக கோகிலா தேவிக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் மகளிர் தின சிறப்பு பேச்சு, நடனம், நாடகம், கவிதை, பாடல் என்பன இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.