ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது.
இதற்காக சி எஸ் கே அணி வீரர்கள் பெரும்பாலானவர்கள் சென்னை வந்து பயிற்சியை தொடங்கினர். தோனி 10 நாட்களுக்கு முன்பாகவே சென்னை வந்து சேர்ந்தார். ஜடேஜா நேற்று வந்து அணியுடன் இணைந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடக்க விழா சென்னையில் நடக்க உள்ள நிலையில், தொடக்க நிகழ்வில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசைக் கச்சேரி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.