சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளி உலகத்திற்கு படம் பிடித்துக் காட்டும் நோக்கில் கனடாவிலுள்ள பெண்களுக்கான சர்வதேச அமைப்பான ‘விழித்தெழு பெண்ணே’ குறுந்திரைப்பட போட்டியொன்றை அறிவித்துள்ளது.
மனதில் உருவாக்கம் பெரும் கதையை குறுந்திரைப்படமாக உருவாக்கி அதனை காட்சிப்படுத்தும் ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்குபற்றலாம்.
போட்டிக்கான தலைப்புகள்:
1.பெண்களுக்கு எதிரான வன்முறை அல்லது ஒடுக்குமுறை.
2.பெண் தலைமைத்துவ குடும்பத்தின் சவால்கள்.
3.தனிநபராகவோ, குழுவாகவோ இணைந்து இப்போட்டியில் பங்குபெறலாம்.
4. உங்கள் குறுந்திரைப்படங்கள் 5 முதல் 15 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
போட்டி முடிவுத்திகதி : 25ஃ03ஃ2024
‘விழித்தெழு பெண்ணே’ கனடா அமைப்பின் தலைவி திருமதி. சசிகலா நரேந்திராவின் வழிநடத்தலில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.