கலகெதர கிராமத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தனியார் வகுப்புகளை இலவசமாக வழங்குவதற்கு HOPE எகடமி நிறுவனத்திற்கு Abdul Hameed Sithy Faleela Foundation கையளிக்கபட்டது.இந்நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக அல்ஹாஜ் A.H.M.FAWMY அவரின் குடும்பத்தினர், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அல்ஹாஜ் ரவூப் ஹகீம், பிரதிக் கல்விப்பணிப்பாளர் உனைஸ் ஆரிப், கலகெதர ஜும்மா பள்ளியின் சிரேஷ்ட இமாம் இப்றாஹீம் ஷாஹிப் நஜாஹி, கல்லூரி அதிபர் பஸால் மொஹம்மட் மற்றும் புத்திஜீவிகள் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
HOPE எகடமி என்பது கலகெதர கிராமத்தில் கல்வி சார் நடவடிக்கைகளை சிறப்பாக நடாத்திச் செல்லும் முன்னனி நிறுவனமாகும். இதன்மூலம் எதிர்காலத்தில் கலகெதர மண்ணில் தலைசிறந்த கல்விமான்களை உருவாக்குவதே முக்கிய குறிக்கோளாகும்.
இந்நிகழ்வின் போது HOPE எகடமி குழுமத்தினரால் நினைவுச்சின்னம் அல்ஹாஜ் A.H.M.FAWMY அவரின் குடும்பத்தினர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.