17 வயதான யாழ்ப்பாண வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மாதுலன், இந்தியன் பிரீமியர் லீக் 2024 இல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் வலைப்பந்து வீச்சாளராக ஆக இணைந்துள்ளார்.
இலங்கையின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஸ்டைலில் பந்துவீசும் மாதுலன், அண்மையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் புனித ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்து முடிந்த போட்டியின் போது அவர் பந்து வீசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, இவரின் பந்து வீச்சு திறமையை அவதானித்த சென்னை அணிநிர்வாகம் அவரை வலைப்பந்து வீச்சாளராக தெரிவு செய்துள்ளது.