கல்வித் துறையில் மாற்றம் ஏற்படுத்தும் போது நவீன தொழில்நுட்பத் திறனை பிள்ளைகளுக்கு வழங்குதல் அத்தியவசியமென்றும், விசேடமாக நெநோ தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், மரபணு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுத் திறன் போன்ற பாடங்களை குறுகிய காலத்தினுள் கல்விப் பொறிமுறைக்கு அறிமுகப்படுத்தும் இச்சவாலிற்கு நாம் ஏதோ ஒரு விதத்தில் முகங்கொடுக்க வேண்டும், எவ்வாறான தடைகள் வந்தாலும் எதிர்காலத் தொழில் உலகிற்கு எமது பிள்ளைகளை தயார்படுத்தாதிருக்க முடியாது என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
கல்கிஸ்ஸ பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 100 வருடப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலைகளில் தரம் 8 முதல் 13வரையான வகுப்புகளுக்கு தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் திருத்தம் செய்வதற்கு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அத்திட்டத்தை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதியிலிருந்து 17பாடசாலைகளைத் இணைத்து ஆரம்பிக்கவுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்பப் பாடத்துடன் செயற்கை நுண்ணறிவை (யுசவகைiஉயைட ஐவெநடடபைநnஉந) அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாகக் கல்வி அமைச்சருடன் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாகவும், அதனால் சர்வதேச தரத்திலான விடய அறிவை நாட்டின் பிள்ளைகளுக்கு வழங்க முடியும் என்றும், ஸ்மார்ட் எழுத்துப் பலகைகளுடனான டிஜிடல் வகுப்புகளுடன் இணைந்ததாக பாடசாலைகளுடன் விடய அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கு பிள்ளைகளுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பல்கலைக்கழக் கட்டமைப்பையும் புதிய தொழில்நுட்பத்துடன் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், தற்போது சர்வதேசத்துடன் இணைந்து ஆய்வு, முதுமாணி உட்பட மாணவர்களுக்கு பெற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் சரளமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சகல கல்வித் துறைகளிலும் புதிய தொழில்நுட்பத்துடன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அவ்வாறே நாட்டின் சகல ஆசிரியர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக வகுப்பறைகளினுள் பாடங்களை எதிர்காலத்தில்; திட்டமிட வேண்டியேற்படும் எனத் தெளிவுபடுத்திய அமைச்சர் கற்றல் செயற்பாடுகளில் தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்வது தொடர்பாக ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு வலய மட்டத்தில் 100 மத்திய நிலையங்களை நிறுவுவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதும் அவற்றில் 85 மத்திய நிலையங்கள் டிஜிடல் மயப்படுத்தப்பட்டதாகவும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் ஏனைய நிலையங்கள் அனைத்தும் டிஜிடல் மயப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், பாடசாலைகளில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை முகாமைத்துவம் செய்து பாடசாலைக் கட்டமைப்பை சக்திமிக்கதாகக் கொண்டு செல்வதற்கு அதிபர்களின் தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத் திறன் அத்தியவசியம் என்றும் மேலும் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் கல்கிஸ்ஸை பெண்கள் உயர்தரப் பாடசாலையின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு நினைவு முத்திரை முதல் நாள் உறை மற்றும் அஞ்சல் முத்திரை என்பன வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.