மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம்!!

கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவித்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக நீர்ப்பாசன அமைச்சின் காலநிலை மாற்றத்தை எதிர் நோக்குவதற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் அணுகுமுறை நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் வவுணதீவு முல்லாமுனை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் நேற்று (13) உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

உன்னிச்சை நீர்ப்பாசன வலது கரை வாய்க்கால் இற்கு மேலாக சுமார் 6 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாலமம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு திட்டத்தின் பாலத்திற்கான பெயர்ப் பலகையினை திறந்து வைத்ததுடன், பாலத்தினை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை றூகம் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நாவற்காடு வாய்க்கால் புனரமைப்பு நிகழ்விலும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வாய்க்கால் புனருத்தாபன நிகழ்வையும் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *